உலக செய்திகள்

WTO-வின் முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization – WTO) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (Ngozi Okonjo-Iweala) நியமிக்கப்பட்டுள்ளாா்

இதன் மூலம் WTO தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் முதன்மையான வா்த்தக அமைப்பான WTO, நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் தொடர்பான விதிமுறைகளை தீர்மானிக்கிறது.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தபோது, இவேலாவின் நியமனத்திற்கு இடையூறாக இருந்தார் எனவும் ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து இவேலாவுக்கு இருந்த தடை நீங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவரது நியமனத்திற்கு பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Related posts

உலகளவில் 20 இலட்சம் பேர் உயிரிழக்கலாம் – WHO எச்சரிக்கை

wpengine

கொவிட்-19 வைரஸ் : சீனாவில் மேலும் 653 பேருக்கு உறுதி

wpengine

ஷின்சோ அபே இராஜினாமாவுக்கு தயார்

wpengine