உள்நாட்டு செய்திகள்

Update – முன்னாள் அமைச்சர் அஸ்வர் இனது இறுதிக் கிரியைகள் இன்று மாலை..



முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் இனது ஜனாஸா தெஹிவளை, பாத்தியாமாவத்தை இல்லத்திலிருந்து  இன்று(30) மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

UPDATE…………… 2018 -08-29

முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர்(80) இன்று(29) இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து பின்பு ஐ.தே.க மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

 

(rizmira)

Related posts

குளவிக் கொட்டுக்கு 28 மாணவர்கள் இலக்கு.. – பாடசாலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்படுகின்றது…

wpengine

அடுத்த மாதம் முதல் சோயாவுக்கான வரி நீக்கம்…

wpengine

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

wpengine