உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்ததில் சுமார் 100 வீடுகள் சேதம் – பதற்றத்தில் மக்கள்..



கொலொன்னாவை – மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததினால் அருகில் இருந்த சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.

குப்பைமேடு சரிந்ததினால் அருகில் இருந்த தொடர் குடியிருப்பொன்று அகப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் சிக்கியுள்ள நபர்களை பாதுகாப்பதற்கு காவற்துறை மற்றும் முப்படைகளின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுவரையில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் ஆபத்துக்கள் தொடர்பில் இதுவரையில் அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இன மத பேதத்தினை துறந்து FEED THE FAMILY – 2015 RAMADAN (VIDEO)

wpengine

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

wpengine

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

wpengine