Top Story 2உள்நாட்டு செய்திகள்

UNP தலைமைப் பதவி – மேலும் மூவரின் பெயர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  நவின் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்  பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு  தீர்மானித்துள்ள நிலையில் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நேற்றைய தினம்  தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினம் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

wpengine

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

wpengine

NPP க்கு எதிராக NPP ஆதரவாளர்கள் போராட்டம்

Azeem Kilabdeen