ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘Tik Tok’ செயலிக்கு வருகிறது தடை…



கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில் தான் இந்திய கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.

சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன்.

´´சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் ´டிக் டாக்´ செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,´´ என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறாக கூறினார் மணிகண்டன்.

“டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும்,” என்று அன்சாரி கோரிக்கை வைத்ததை அடுத்து அமைச்சர் மணிகண்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஊடாக பணம் சம்பாதிக்கும் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில்

wpengine

sex தேடலில் ஹோமாகம முதலிடத்தில் உலகில் இலங்கைக்கு 3ம் இடம்..

wpengine

குசல் மென்டிசுக்கு சர்வதேச மைதானத்தில் இருந்து ஓய்வு வழங்கப்பட வேண்டும்..

wpengine