உள்நாட்டு செய்திகள்

TID இனால் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  மட்டக்களப்பு) – அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்,

அண்மையில் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு பேரில் இவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நால்வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன் போது 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தனர்,

Related posts

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

wpengine

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!

wpengine

மீள் உயிர்ப்பிக்கும் யாழ். பெற்றோலிய விநியோக நிலையங்கள்

wpengine