விளையாட்டு

T20 WORLD CUP : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து



(ஃபாஸ்ட் நியூஸ் | அபூதாபி) – இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக மொயின் அலி 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஷம் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 167 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக டேரில் மிட்செல் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் லியாம் லிவிங்ஸ்டன் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, நியூசிலாந்து அணி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Related posts

உலகக் கிண்ணம் மீது கால்களை வைத்தது மனதை காயப்படுத்தியது- முகமது ஷமி..!

wpengine

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விவரம்…

wpengine

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் இவர்கள்தான்..

wpengine