ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

SLPP இனது தேசிய சம்மேளனத்தில் SLFP கலந்து கொள்ளாது



(FASTGOSSIP| COLOMBO) – எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தேசிய சம்மேளனத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறான தேசிய சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்காது என தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Windows இயங்கு தளம் – புதிய கணனி வைரஸ்…

wpengine

கைது செய்யப்படுவாரா கோட்டா ?

wpengine

76 ஆண்களுடன் பாலியல் உடலுறவு கொண்டுள்ள யாழ் மாணவி

wpengine