Top Story 3உள்நாட்டு செய்திகள்

PortCity நடைபாதை மக்கள் பாவனைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (10) மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகர நடைபாதையினை இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள கொழும்புத் துறைமுக நகர நுழைவாயில் ஊடாக உட்பிரவேசிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது, குறித்த நடைபாதை நேற்று (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) உள்ளிட்டோர் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலன்னறுவையில் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை…

wpengine

வஸீம் தாஜுதீன் இனது காணாமல் போன உடல் உறுப்புகள் மறைக்கப்பட்டுள்ள இடம் வெளிச்சத்திற்கு..

wpengine

இன்று(03) முதல் விசேட போக்குவரத்து நடைமுறை அமுலுக்கு..

wpengine