Top Story 3உள்நாட்டு செய்திகள்

PHI அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(29) காலை 7.30 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த 16 ஆம் திகதி முதல் பொது சுகாதார பரிசோதகர்களால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அறிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்குரிய அதிகாரங்களுக்கமைய வழக்கொன்றை தொடரும் போது சுகாதார அதிகாரியுடன் ஆலோசிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் இதன்போது இணங்கியுள்ளதாக இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த தலைமையில் 1வது நிறைவேற்று சபை கூட்டம்

wpengine

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

wpengine

பர்ப்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் கைது…

wpengine