உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

OICஐ மோதிய சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 05 பேர் கைது…



(FASTNEWS | COLOMBO) பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது பம்பலபிடிய பகுதியில் டிபென்டர் வாகனம் ஒன்றினை மோதிச் சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இனது புதல்வனான ரணிஷ்க அளுத்கமகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடமை நிமித்தம் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தப் போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(24) அதிகாலை 4.35 மணியளவில் கொழும்பு- காலி பிரதான வீதியின் டுப்ளிகேசன் சந்தியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த டிபென்டர் வாகனமும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள்..

wpengine

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

wpengine

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine