விளையாட்டு

LPL : கொழும்பு கிங்ஸ் அணிக்கு வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை) – லங்கா பிரிமியர் லீக் தொடரின் (LPL) முதலாவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை, கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது .

ஹம்பாந்தோட்டையில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது

இதன்படி, முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

220 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 219 பெற்ற நிலையில், போட்டி சமநிலையானது .

இதனையடுத்து வீசப்பட்ட சுப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 1 விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 17 என்ற வெற்றியிலக்கை நோக்கி சுப்பர் ஓவரில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவானார்.

Related posts

நாளைய போட்டி தொடர்பில் வில்லியம்ஸ் கவலை

wpengine

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான T20 தொடர் இன்று

wpengine

பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறினார் கிறிஸ் கெயில்

wpengine