கேளிக்கை

Kings Of Dance புகழ் ஹரி மரணம்…



சமீப காலமாக பிரபலங்களின் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. தற்போது விஜய் டிவியில் பிரபலர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் அப் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் ஹரி. அந்த நிகழ்ச்சியில் சிறப்பான தனது நடனத் திறமையால் அணைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பல முறை நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ஹரி, கடந்த புதன்கிழமை (மே 9 ) அன்று சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஹரியின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தியை அறிந்த விஜய் டிவியின் பிரபல பெண் தொகுப்பாளினி பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்ட கணவர் மற்றும் பிள்ளைகள்…

wpengine

கமல் ஹாஸனின் மகளுக்கு தாய் வேடத்தில் நயன்தாரா..

wpengine

அரசியலுக்கு வருகிறார் சமந்தா நாக சைதன்யா…

wpengine