உலக செய்திகள்விசேட செய்தி

ISIS கைதிகளால் தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 33 பேர் பலி…



(FASTNEWS | COLOMBO) – தஜிகிஸ்தான் நாட்டின் வாக்தாத் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சிறையிடப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கைதிகளுக்கும் சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட தகராறு பின்னர் கலவரமாக மாறியுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்ட போதிலும், கைதிகளை சமரசம் செய்ய முடியாமையினை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 சிறை கைதிகள் மற்றும் 03 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்…

wpengine

பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

wpengine

அமெரிக்காவுக்கு தலையிடியாய் ரஷ்யா

wpengine