உள்நாட்டு செய்திகள்

ISIS ஊடுருவல் குறித்து உளவுப் பிரிவினர் உஷார் நிலையில் – இராணுவப் பேச்சாளர்


ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்  ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். அத்துடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ். அமைப்பில்  இணைந்து கொண்ட இளைஞர்கள் இலங்கையில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர- இவ் விடயம் தொடர்பில் விரிவாக எதனையும் கூறமுடியாது. அதேவேளை எமது உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எனவே எதற்கும் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine

75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

wpengine

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு

wpengine