உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

IPL தொடரிலிருந்து பிராவோ விலகல்.. இர்பான் களத்தில்..



மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரரான பிராவோ காயம் காரணமாக 10வது ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஐபிஎல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அணியில் கலக்கி வந்த பிராவோ 10வது ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

கடந்த டிசம்பர் 2016ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடிய போது பிராவோவுக்கு தசைப்பிடிப்பு உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

இதற்காக, கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் ஒரு போட்டியில் கூட குஜராத் அணிக்காக களமிறங்காத நிலையில் தொடரிலிருந்தே விலகியுள்ளார்.

இந்நிலையில், அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரராக இந்திய வீரர் இர்பான் பதான் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்..

wpengine

போராட்டகாரர்களுக்கு தினமும் 500 உணவு பொதிகளை வழங்கிய நட்சத்திர ஹோட்டல்:பொலிஸார் தகவல்

wpengine

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோக நிறுத்தமானது தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine