விளையாட்டு

IPL இன்று ஆரம்பமாகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | அபுதாபி) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரானது இன்று(19) அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருந்த ஐ.பி.எல் தொடர் கொவிட்-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்ததன் பின்னர் இந்த தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கவிருந்த இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஸ் ரெய்னா உள்ளிட்ட பிரபல வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகல்

wpengine

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

wpengine

ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டொலர் நன்கொடையாக வழங்க நான் தயார்

wpengine