உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

GMOA பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடல்..


அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று(28) சந்திக்கவுள்ளனர்.

இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் இன்றைய சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

நாட்டின் கல்வி தொடர்பிலான காரணிகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் மேலும் பரிந்துரை செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு..!

wpengine

பண்டாரவளையில் அமைதியின்மையை ஏற்படுத்திய 19 பேர் விளக்கமறியலில்…

wpengine