ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

facebook ஊடாக ட்ரம்ப் இற்கு ஆதரவளித்தமைக்கு வருந்துகிறோம்.. (Photos)



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக முகநூலில் (facebook) ரஷ்யர்கள் பிரச்சாரம் செய்ததாக எழுந்த சர்ச்சையில் மார்க் ஸக்கர்பெர்க் பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு சாதகமாக வாக்காளர்களின் மனநிலையை மாற்ற ரஷியர்கள் ஏராளமானோர் முகநூலில் பிரசாரம் செய்ததாக சர்ச்சை உருவாகியது. இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியதில் பேஸ்புக்கின் பங்கு எதுவும் இல்லை என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்தது.

இந்நிலையில், அந்நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பெர்க் தனது பக்கத்தில், ‘மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக, அவர்களை பிளவுபடுத்தும் வேலைகளுக்கு எனது படைப்பு பயன்படுத்தப்பட்டு விட்டது. என்னால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல், மிகச் சிறப்பாக செயல்பட முயற்சி மேற்கொள்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

தான் மன்னிப்பு கோருவதற்கான காரணத்தை மார்க் ஸக்கர்பெர்க் நேரடியாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள எதிர்மறை விளைவுகளுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

(rizmira)

Related posts

சிம்புவின் புதிய காதல் ஜோடி….

wpengine

IPL தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்து

wpengine

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ

wpengine