உள்நாட்டு செய்திகள்

ETF மற்றும் EPF மாற்றம் குறித்து விசேட கலந்துரையாடல்



ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள மாற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இந்தக் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து தனியார் துறையிலுள்ள ஊழியர்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் அன்றைய விசேட உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை சட்டமாக்குதலுக்கான தேவை தொடர்பில் இன்று நடைபெறுகின்ற கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்படும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஆயிரம் ரூபா – வர்த்தமானிக்கு இடைக்கால தடை

wpengine

ஜனாஸா எரிப்பு : அமைதிப் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் தொடரும் [VIDEO]

wpengine

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

wpengine