உலக செய்திகள்

British Airways நிறுவனத்தின் 36,000 ஊழியர்கள் பணி இடைநீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 36,000 ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இடைநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இந்த பணிநீக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான கேபின் குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஏனைய பணியாளர்கள் என 80 சதவீத ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கபப்டுகின்றன.

எனினும், அரசின் கொரோனா வைரஸ் திட்டப்படி, இவர்கள் வாங்கிவந்த 80 சதவீத ஊதியம் இவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக இம்ரான் கான் அறிவிப்பு..!

wpengine

குவைட் நாடாளுமன்றம் கலைப்பு

wpengine

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க கோரிய வழக்கில் பரபரப்பு.

wpengine