உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ATM அட்டைகளை உபயோகிப்போர் அவதானமாக இருக்குமாறு வங்கிகள் எச்சரிக்கை..



நாட்டில் உள்ள பிரதான வங்கிகளின் தானியக்க பண இயந்திரங்களின் (ஏடிஎம்) அருகில் இந்நாட்களில் அறிவித்தல் ஒன்று பொதுமக்களுக்காக ஒட்டப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வங்கிகளின் அலுவலக உதவியாளர்கள் என கூறப்படும் ஒரு குழுவினர் வீடுகளுக்கு வருகை தந்து வங்கிக் கணக்குகள் குறித்து வினவுவதாகவும், ஏடிஎம் அட்டையின் இரகசிய இலக்கத்தினை கோருவதாகவும், பண மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அதிலிருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எவ்வித காரணங்களுக்காகவும் உங்கள் கணக்கு அட்டையினையோ அல்லது இரகசிய இலக்கத்தினையோ யாரிடமும் வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இன்று 12 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை…

wpengine

அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை…

wpengine

சு.கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது

wpengine