உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

AH1-N1 வைரஸ் தொற்று – கண்டி போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள்..



AH1-N1 வைரஸ் தொற்று குறித்து சிகிச்சை அளிப்பதற்கு விசேட சிகிச்சை பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் AH1-N1 வைரஸ் தொட்டினால் பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திசாலையின் பணிப்பாளர் டாக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

விசேடமாக அத்தியாவசிய தேவைக்காக அன்றி கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வைத்திசாலையின் பணிப்பாளர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்

தும்மல், தடிமன் மூக்கில் நீர் வடிதல், இருமல் போன்ற வற்றின்போது இவ்வைரஸ் ஏனையவர்களுக்கு பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும் என்பதால் பிரத்தியேகமான கைக்குட்டை உபயோகிப்பதுடன் கைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதோடு, சுகாதார அமைச்சினால் தேவையான மருந்து வகைகளும் ஆலோசனைகளும் வைத்தியசாலைக்கு வழங்கப்படடுள்ளதாகவும் வைத்திசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்

wpengine

வெலிக்கடை மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டு…

wpengine

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை

wpengine