Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமடைகிறேன். அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு அன்புக்குரியவர்கள் மற்றும் மக்களது உரிமைகளுக்கு ஜனநாயக அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருது குரோஷிய அணியின் லூகா’விற்கு…

wpengine

பிரதமரின் சர்வதேச மனித உரிமைகள் தின செய்தி

wpengine

இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வரும் வேட்புமனுத் தாக்கல்

wpengine