உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(20) கல்வியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பெப்ரவரி மாதம் 15ம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கமைய குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் ஹரிஸனுக்கு எதிராக ஊழல் விசாரணை அலுவலகத்தில் முறைப்பாடு

wpengine

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை வரலாற்று வெற்றி – கபீர் ஹாஷிம்

wpengine

வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறித்து ராஜித ஒப்புதல்..?

wpengine