Top Story 3உள்நாட்டு செய்திகள்

UNP விசேட செயற்குழுக் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியில் தற்போது வெற்றிடமாகவுள்ள பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிகாரிகள் குழாமை நியமிப்பது தொடர்பில், இதன்போது விசேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஷமல் செனரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, இதுவரை எவரும் பெயரிடப்பாத பின்னணியில், அது தொடர்பிலும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரூ.2,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

wpengine

வெலிக்கட துப்பாக்கி சூட்டு சம்பவம் – வலையில் 26 வயது இளைஞர்

wpengine

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான வர்த்தமானி

wpengine