உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடி ஐந்து நாட்களுக்கு முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | காத்தான்குடி) – காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் களுக்கு நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது, 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின்போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன்களுடன் இருவர் கைது…

wpengine

COPE மற்றும் COPA குழுக்களுக்கான தலைவர்கள் இன்று நியமனம்

wpengine

சிம்பாப்வே எதிரான டெஸ்டில் இலங்கை அணி வலுவான நிலையில்..

wpengine