உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்கு வருகை தந்த உக்ரைன் பயணிகளில் அறுவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உக்ரைன் நாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த மேலும் மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இதுவரை அறுவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி 185 சுற்றுலா பயணிகளும் 29 ஆம் திகதி 204 சுற்றுலா பயணிகளும் உக்ரைன் நாட்டிலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

wpengine

நான்கு சிறுமிகள் மாயம் – பொலிசார் விசாரணை

wpengine

இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு..!

wpengine