Top Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்று 668 கொவிட் தொற்றாளர்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41,054 ஆக அதிகரித்துள்ளது

இதன்படி, நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 668 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 614 பேரும், சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 54 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,701 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,160 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

குறைக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல் அமுல்…

wpengine

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

wpengine

‘சினோபார்ம்’ புதனன்று வரும்

wpengine