உலக செய்திகள்

அண்டார்டிகாவிலும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | அண்டார்டிகா) – அண்டார்டிகாவில் உள்ள இரண்டு இராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 8 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த புது வைரஸ் 70% அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடைசியாக இதுவரை கொரோனா எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் ராணுவ முகாம் வைத்துள்ள பிற நாடுகள் இதுவரை கொரோனா வைரஸ் குறித்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபூ பக்கர் அல் பக்தாதி ஆப்கானிஸ்தானில் தலைமறைவு..?

wpengine

சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பியோட்டம்

wpengine

கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் மரணம்…

wpengine