உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா கொலைக்கான பொறுப்பை கொண்டயாவின் சகோதரர் ஏற்பு



சேயா பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான முழுமையான பொறுப்பினை தான் பொறுப்பேற்பதாக “கொண்டயா” எனப்படும் பிரதான சந்தேக நபரின் சகோதரர் சி.ஐ.டி. இடம் கூறியதாக சி.ஐ.டி. நீதிமன்றில் தெரிவிப்பு.

அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமியான சேயா துஷ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர். 

பின்னர் கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவர் கைதானதோடு தானே கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 

இந்தநிலையில் கடந்த வாரம் குறித்த கொலை தொடர்பில் கொண்டைய்யாவின் சகோதரர் கைதுசெய்யப்பட்டார். 

தற்போது இவர் தானே அந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை கொண்டையாவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

(riz)

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் CID விசாரணை

Azeem Kilabdeen

டாக்டர். கிரிஸ் நொனிஸ்சுக்கு பொலிஸ் அழைப்பாணை

wpengine

கலர் லைட் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்..!

wpengine