உள்நாட்டு செய்திகள்

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பண்டாரகம – அடுளுகமை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டட தாழிறங்கியதால் சாரதிகளுக்காக அறிவித்தல்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக Pfizer

wpengine