Top Story 3உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத்திட்ட விவாதம் – மூன்றாம் நாள் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அசை்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நெல்லை உட்கொண்ட காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில், சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் பலி..!

wpengine

மின்கட்டணம் மீண்டும் அதிகரிப்பு?

wpengine

வீடுகளை இழந்த எம்.பிக்களுக்கு தற்காலிக வீடுகள்- ஜனாதிபதி

wpengine