விளையாட்டு

கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் தொடரின் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் கபீர் அலி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 26 முதல் லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 சுற்றுத் தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ஜுனா, இலங்கைக்கான ஒரு இம்ரான் கான் தான்

wpengine

உத்வேகம் காட்டாத சென்னையை சாய்த்தது மும்பை சாம்பியன்

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மஹேல புதிய அவதாரமெடுக்கிறார்

wpengine