Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,170 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,806 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5,807 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, கொழும்பில் மாத்திரம் ஐயாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்…. -தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

wpengine

அரச ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு

wpengine

எதிர்வரும் 25 முதல் புகையிரத சேவை இடைநிறுத்தம்

wpengine