Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 12,570 கொவிட் தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(05) 383 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியான நோயாளயர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,623 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் 5,918 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

wpengine

இன்றும் நாளையும் கடும் காற்று…

wpengine

மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

wpengine