உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,076 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 156 வானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

புத்தாண்டின் சுப நேரங்கள்

wpengine

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று

wpengine

கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…

wpengine