விளையாட்டு

IPL தொடரில் இருந்து ப்ராவோ நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணியின் சகலதுறை வீரர் டுவையன் ப்ராவோ அறிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது அவர் காயமடைந்து உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை ஐபிஎல் தொடரின் 40வது போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன.

இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளோடு 6ம் இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளோடு 7ம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்…

wpengine

பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஷம்பக்க ராமநாயக்க

wpengine

நாளைய போட்டியில் பங்கேற்க ஷாகிப் அல் ஹசன் இன்று இலங்கை வருகிறார்..

wpengine