கேளிக்கை

கொரோனா காரணமாக காஜல் அகர்வால் திருமணத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலின் திருமணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்களது திருமணம் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றன.

Related posts

விசாவுக்காக திருமணம் – சர்ச்சையில் சிக்கினார் ராதிகா

wpengine

‘தளபதி 65’ இல் யோகி பாபு

wpengine

சூர்யாவின் படத்தில் பாடகியாகும் பிரபல இசையமைப்பாளரின் மகள்

wpengine