Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாடு முடக்கப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான நாளை(10) நாளை மறுதினம்(11) கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அல்லது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்ட 18 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், நாட்டில் கொரோனா நோய்த் தொற்று எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது உறுதியாகக் கூற முடியாது மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

wpengine

பூஜித் – ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

wpengine

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது….

wpengine