உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு வாகனம் பெறும் வாய்ப்பு



 வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை பதவி வகிப்போருக்கும் தீர்வையற்ற வாகனம்பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாபீர் பௌன்டேசனின் தலைவரும்நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

 இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,


இலங்கைக்கு தேசிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் வழிகளில் வெளிநாட்டில்தொழில்புரியும் சுமார் 20 லட்சம் பேரின் உழைப்பு என்பது மிகப்பிரதானமானதாகும்.ஆனால் குறித்த இந்த பணம் புரட்டிக்கொடுக்கும் இயந்திரங்கள் இயந்திரங்களாகவேநோக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினால் இவர்கள் தொடர்பில் பாரிய கரிசணைகாட்டப்படுவதில்லை. நாட்டில் நல்லாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்தசந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் தொழில்புரியும் சுமார் 20 லட்சம் பேரின் உணர்வுகளுக்கும்மதிப்பளிக்கப்படவேண்டும். இலங்கையில் பணிபுரியும் உயர்நிலைஉத்தியோகத்தர்களுக்கு தீர்வையற்ற விதத்தில் வாகனங்களை கொள்வனவுசெய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது போல் வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலைஉத்தியோகத்தர்களுக்கும் தீர்வையற்ற விதத்தில் வாகனங்களை கொள்வனவுசெய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.


அதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய தொழிலாளர்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் நல்லாட்சியை மேற்கொள்ளும் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை ; அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

wpengine

வஸீம் தாஜுடின் கொலை தொடர்பிலான சாட்சியங்களை அழிக்க முயற்சி

wpengine

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

wpengine