உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவிற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை



காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு, எதிர்வரும் அக்டோபர் 09 ம் திகதி ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இவருடன் சேர்த்து நான்கு பேருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவின் பிரகாரம் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டை குடியுரிமை பெற்ற எவரும் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது எனவே, அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையினை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கீதா குமாரசிங்கவிற்கு இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வெலே சாரங்க கைது…

wpengine

லலித் குமாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

wpengine

சுமார் 40 மாணவர்களின் தாக்குதலில் கொழும்பின் பிரபல பாடசாலை மாணவன் ஆபத்தான நிலையில்…

wpengine