உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் அம்புரோஸ் திடீர் நீக்கம்

wpengine

போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய தண்டப்பணம் அறவீடு..

wpengine

பாராளுமன்றில் சில முக்கிய இடங்களில் CCTV கெமராக்கள் பொருத்த நடவடிக்கை.

wpengine