உள்நாட்டு செய்திகள்

மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவரை காணவில்லை



அண்மையில் மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த 58 வயதான அபூபக்கர் அசீஸ் மற்றும் 55 வயதான ரோஷன் அப்துல் அசீஸ் தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் இருவரையும் தேடும் பணியை விரைவாக செயற்படுத்தபடுவதாக மக்கா யாத்திரிரையில் ஈடுபட்டிருந்த அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு காணாமல் போனவர்களின் மகன் இம்ரான் அப்துல் அசிஸ், அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

காணாமல்போன குறித்த இலங்கையர்களை தேடுவதற்காக குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜித்தாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் அறிவித்துள்ளது.

(riz)

 

 

Related posts

மஹிந்த அரசு வட முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை முஜிபுர் ரஹ்மான்

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி – பொலிஸ்மா அதிபரிடம் மக்கள் காங்கிரஸ் நேரில் முறைப்பாடு!!

wpengine

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்…

wpengine