உள்நாட்டு செய்திகள்

கட்டிட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி ) – கண்டி – பூவெளிக்கடை பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள 3 வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கண்டி- பூவெலிகட பகுதியில் நேற்று(20) காலை 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருந்தது.

குறித்த கட்டிடம் உடைந்து அருகில் இருந்து வீட்டின் மீது விழுந்ததில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று (21) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த கட்டிடம் நிலையற்ற நிலத்தில் அமைக்கப்பட்டமையின் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்தார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேர் கண்காணிப்பில்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(07) கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

wpengine

பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு..!

wpengine