உள்நாட்டு செய்திகள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லமிற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

35 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதான யோசனை நிராகரிப்பு…

wpengine

கப்பலுடன் படகு விபத்து – உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு…

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 514 பேர் சிக்கினர்

wpengine