உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக் குவியும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு



ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு 30 ஆயிரம் வெளிநாட்டினர் சென்றுள்ளதாக தற்போது  தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 2011-லிருந்து சுமார் 30 ஆயிரம் வெளிநாட்டினர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு ஈராக் மற்றும் சிரியாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 250 அமெரிக்கர்களும் அடங்குவார்கள்.

மேலும், இதுவரை அமெரிக்க நடத்திய தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதே சமயம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 பேர் புதிதாக அவ்வியக்கத்தில் சேர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(riz)

 

Related posts

சீரற்ற காலநிலையினால் டெங்கு பரவும் அபாயம்..

wpengine

1988, 1989ஆம் காலப்பகுதியினை மீள் விவாதிக்கத் அநுர அழைப்பு

wpengine

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்…

wpengine