உள்நாட்டு செய்திகள்

நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் (26) கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய, அண்மையில் திரு.ஏ.எம்.எம்.நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகாரபீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகப்பிரிவு–

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கலந்துரையாடல் இன்று(18)…

wpengine

உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் செப்டம்பர் முதல் ஆரம்பம்..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, பெத்தகன ஈர நில பூங்காவிற்கு தற்காலிக பூட்டு…

wpengine