Top Story 3உள்நாட்டு செய்திகள்

மின் துண்டிப்பு : அறிக்கை இன்று அமைச்சரவைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால், பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் 9 பேரை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளும் குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கோழி இறைச்சி, முட்டை விலைகள் மேலும் குறையும்..!

wpengine

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல்…

wpengine

சபாநாயகர் கரு’விடம் இருந்து விசேட அறிக்கை

wpengine