உள்நாட்டு செய்திகள்

மேலும் 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நான்கு விசேட விமானங்களின் மூலம் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டாரின் தோஹா இருந்து 20 பேர், சென்னையில் இருந்து 290 பேர், மேலும், குவைத்தில் இருந்து 266 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 169 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டுக்கு வருகை தந்த அனைவரும் விமான நிலையங்களில் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு

wpengine

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

wpengine

13-வது திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் இனக் கலவரம் வெடிக்கலாம்!- விமல் வீரவன்ச

News Editor